இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான மூலோபாய கலந்துரையாடல்

#UnitedKingdom #SriLanka #sri lanka tamil news #srilankan politics #Meeting #Lanka4
Prathees
2 years ago
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான மூலோபாய கலந்துரையாடல்

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் இன்று (18) மூலோபாய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் வெளிவிவகார செயலாளர் திருமதி அருணி விஜேவர்தன பங்கேற்கவுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் இடம்பெறும் முதலாவது மூலோபாய உரையாடல் இதுவாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 75 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இந்த மூலோபாய உரையாடலின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள் குறித்து விவாதிக்க இரு தரப்பினருக்கும் ஒரு தளம் கிடைக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!