கல்லூரி மாணவி சுட்டுக்கொலை: பட்டப்பகலில் நடந்த பயங்கரம்
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#Murder
Mani
2 years ago

உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டம் அயிட் நகரை சேர்ந்த ரோஷினி (21) என்ற கல்லூரி மாணவி பி.ஏ. படித்து வந்தார். இவர் தேர்வு எழுதிவிட்டு 11 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த 2 பேர் ரோஷினியை இடைமறித்தனர். பின்னர், தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் மாணவியை சரமாரியாக சுட்டனர்.
இந்த சம்பவத்தில் ரோஷினி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். காவல் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேக அடிப்படையில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



