கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டத்தை இந்திய ரயில்வே வெற்றிகரமாக நடத்தியது
#Kerala
#Vande Bharat train
#Train
#PrimeMinister
Mani
2 years ago
.jpg)
நாடு முழுவதும் தற்போது வந்தே பாரத் ரயில்கள் அதிகம் இயக்கப்பட்டு வருகிறது என்பதும் சென்னையில் இருந்து மைசூர் மற்றும் கோவை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூர் இடையே வரும் 25ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். இந்த ரயிலின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்ற நிலையில் கேரளாவில் இருந்து புறப்பட்ட ரயில் எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்ததாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.



