பாராளுமன்றம் எதிர்வரும் 25ஆம் திகதி கூடவுள்ளது!

#SriLanka #Sri Lanka President #Parliament #Meeting #Lanka4
Mayoorikka
2 years ago
பாராளுமன்றம் எதிர்வரும் 25ஆம் திகதி கூடவுள்ளது!

புத்தாண்டுக்கு பின்னர்  பாராளுமன்றம் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவுள்ளதுடன், அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள அறிக்கை தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும், 25 ஆம் திகதி  பாராளுமன்றத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிப்பதற்கு  பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற இருக்கிறது. 

அன்றைய தினம் காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக  பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!