குடத்தனையூர் சிவசேகரனின் அந்நியத்தின் விலாசம் கவிதை நூல் அறிமுக விழா

#Jaffna #Event #Tamil #Tamilnews #Lanka4
Kanimoli
2 years ago
 குடத்தனையூர் சிவசேகரனின் அந்நியத்தின் விலாசம் கவிதை நூல் அறிமுக விழா

கவிஞர் குடத்தனையூர் சிவசேகரனின்  அந்நியத்தின் விலாசம் எனும் கவிதை நூல் அறிமுக  விழா குத்தனை வடக்கு அகரம் வளாகத்தில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார்  தலமையின்  இறை வணக்கத்துடன் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக மங்கல விளக்கினை நிகழ்வின் பிரதம விருந்தினரான வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவகர் செபமாலை தோமஸ் ஜீட், சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் பா.இரகுவரன், திருமதி யசோதா சிவகுமார், கவிஞர் வதிரி சி.இரவீந்திரன் கவிஞர் சு.குணேஸ்வரன், கவிஞர் தயாளினி நேமிநாதன் ஆகியோர் ஏற்றினர்.

தொடர்ந்து வாழ்த்துரையினை எழுத்தாளர் பா.இரகுவரன், புற்றளை மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் திருமதி யசோதா சிவகுமார், குடத்தனை வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி அனிதா தயாபரன், உட்பட பலரும் ஆற்றினர்.

தலமை உரையினை கோப்பாய் ஆசிரிய கலாசாலை விருவுரையாளரும் நிகழ்வின் தலைவருமான வேல் நந்தகுமார் தலமை உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து விமர்சன உரைகளை எழுத்தாளர் பா.இரகுவரன், கவிஞர் வதிரி சி.இரவீந்திரன், கவிஞர் சு.குணேஸ்வரன், கவிஞர் தயாளினி நேமிநாதன் உட்பட பலரும் நிகழ்த்தினர். அதனை தொடர்ந்து நூல் அறிமுகம் இடம் பெற்றது.

ஏற்புரையினை குடத்தனையூர் கவிஞர் சிவசேகரன் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள்,  இலக்கியவாதிகள் மக்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!