இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்ட இலங்கை விமானம் இன்று வரவுள்ளது

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தொழில்நுட்பக் கோளாறிற்கு உள்ளான ஸ்ரீலங்கன் விமானம் 30 மணித்தியால தாமதத்தின் பின்னர் இன்று காலை 9.30 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 15ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்திற்குச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 06 பொறியியலாளர்கள் விமானத்தை சீர்செய்து மீட்டெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் கூற்றுப்படி யு. எல்.-605 ரக விமானம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இலங்கைக்கு புறப்படவிருந்தது.
மெல்பேர்ணிலிருந்து சுமார் 300 இலங்கை விமானப் பயணிகள் அங்கு வரவுள்ளனர்.