இன்றைய வேத வசனம் 17.04.2023: அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்

ரோஜா செடியிலுள்ள மொட்டானது குறிப்பிட்ட காலம் வரும் போது தானகவே விரிந்து அழகிய மலராய் மாறும். அதற்கு முன்பு கையினால் அந்த மொட்டைப் பிரித்து மலரச் செய்தால் அது வீணாகி விடும்.
அது போலவே தான் அன்பு வாலிப சகோதர, சகோதரிகளே உங்கள் கல்வி, திருமணம், வேலை போன்றவை எதுவாயினும் தேவன் குறித்த காலம் வரை அமைதியாக தேவசித்தத்திற்க்கு காத்திருங்கள்.
காலதாமதமோ சூழ்நிலைகளோ வாக்குத்தத்தம் நிறைவேறுவதைக் தடுத்து நிறுத்த முடியாத
அநேக வருடங்களுக்கு முன்பு ஒரு ஹாலில் இன்னிசைக் கச்சேரி நடந்தது.
அதில் பங்கு பெற்ற ஒரு பெண் அந்த விழா முடிந்து வீடு திரும்பினாள். வீட்டிற்கு சென்ற பின் தனது வைரமோதிரம் காணாமல் போனதைக் கண்டு, அந்த ஹாலில் தொலைந்திருக்கும் என மேனேஜருக்கு போன் பண்ணினாள்.
அவர் அந்த பெண்ணிடம் லைனில் இருங்கள் மோதிரம் கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். சில நிமிடங்களில் அந்த மோதிரம் கிடைத்து விட்டது. ஆனால் மோதிரத்தை தொலைத்த பெண் பொறுமையிழந்து அவநம்பிக்கையில் போனை வைத்து விட்டுப் போய்விட்டாள்.
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனைப் பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருந்த ஆபிரகாமைப் போல நாமும் காத்திருக்க வேண்டும். தனது சொர்பனங்கள் நிறைவேற 13 ஆண்டுகள் காத்திருந்த யோசேப்பைப் போல நாம் பொறுமைாயாக காத்திருக்க வேண்டும்.
நாம் அப்படி சோர்ந்து போகாமல் தேவன் மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் ஏற்ற காலத்தில் தேவனுடைய மகிமையை காண்போம்.
சிறியதோ பெரியதோ பொறுமை அவசியம்..!
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; (#பிரசங்கி 3:11)



