மதுராந்தகம் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து அதில் பல பொருட்கள் சேதம்

#fire #Tamil Nadu #Tamil People #Tamilnews #Factory
Mani
2 years ago
மதுராந்தகம் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து அதில் பல பொருட்கள் சேதம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை உள்ளது. 200 டன்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் தயாராக தயாரிக்கப்பட்ட விதைகள் மற்றும் பாய்கள் தீயில் எரிந்தது. 

இதில் பல லட்சம் மதிப்பிலான கண்டெய்னர் லாரி மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன. இந்த தீ விபத்தால் சுற்றுவட்டார கிராமங்களான புதுப்பட்டு, சட்டமை, மலைபாளையம், ஆண்டவாக்கம், வேடவாக்கம், வேடதாங்கல், புருதிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் கரும் புகை சூழ்ந்தது.

மதுராந்தகம், அச்சரப்பாக்கம், உத்தரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா என மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!