பூநகரிக்கு குடிநீர் திட்டத்தை பூரணப்படுத்த வலியுறுத்துங்கள்! ஸ்ரீதரன் எம்பி இடம் பூநகரி மக்கள் கோரிக்கை

பூநகரிக்கு குடிநீர் திட்டத்தை பூரணப்படுத்த வலியுறுத்த கோரி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்பியிடம் மக்கள் கோரிக்கை ஒன்று முன்வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் ஞானிமடம் வட்டாரத்தில் உள்ள ஞானிமடம் வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்களின் பிரச்சினைகளை அறிதல் மற்றும் சமகால அரசியல் விடயங்கள் கட்சி கட்டமைப்புக்களை விரிவாக்குதல் என்பவற்றை உள்ளடக்கிய கலந்துரையாடல் அப்பகுதி மக்களுடன் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் குடிநீரை பெறுவதற்கு தமது பகுதி மக்கள் எதிர் நோக்குகின்ற பெரும் இடர்பாடுகளை தீர்க்கும் வகையில் பூநகரி நோக்கி மேற்கொள்ளப்பட்டுள்ள நீர் வழங்கல் திட்டத்தை பூரணப்படுத்த குறித்த திணைக்களத்தை வலியுறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் இடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது



