பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது - நீதி அமைச்சர்

#wijayadasa rajapaksha #Minister #ChiefMinister #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது - நீதி அமைச்சர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்தை கடந்த 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கும் நடவடிக்கையை ஒத்திவைக்க தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், குறித்த சட்டமூலத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்காக, அதனை ஒழுங்குப் பத்திரத்திற்குள் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நீதியமைச்சர் தெரிவித்தார்.

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை எதிர்வரும் மே மாதம் முதலாவது பாராளுமன்ற வாரத்தில் முன்வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!