லஞ்ச பணத்தை வாழை மரங்களில் பதுக்கி வைத்த போலீசார்: விசாரணையில் தெரிய வந்தது
#Police
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் தமிழக-கேரளா எல்லையான நடுப்புனி சோதனை சாவடியில் தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் கேரளாவில் வருவது வழக்கம் .
இங்கு, வாகன ஓட்டுகளிடம் சோதனையில் ஈடுபடும் போலீசார் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தொடர்ந்து, நடுப்புனி சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சோதனை சாவடி அருகேயிருந்த வாழை மரத்தில் சுருட்டி வைக்கபட்டு இருந்த ரூபாய் 500 மற்றும் 100 தாள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த வாழை மரத்தில் இருந்து 8900 ரூபாய் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அலுவலக உதவியாளர் விஜயகுமார் மற்றும் லைப் ஸ்டாக் இன்ஸ்பெக்டர் ஷாஜி, கள அலுவலர் அசோகன் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



