2000 ரூபாய் கடனுக்காக சக தொழிலாளியின் இரண்டரை வயது குழந்தையை கடத்திய தம்பதியை கைது செய்து, குழந்தையை மீட்ட போலீசார்
#children
#Tamilnews
#ImportantNews
#Breakingnews
Mani
2 years ago

இரண்டாயிரம் ரூபாய் கடனுக்காக சக தொழிலாளியின் இரண்டரை வயது ஆண் குழந்தையை ஜோலார்பேட்டையிலிருந்து கடத்தி வந்த தம்பதியை திருப்பூரில் போலீசார் பிடித்தனர்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி ஆண் குழந்தையுடன் சுற்றித் திரிந்த தம்பதி குறித்து அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஜோலார்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் தங்கி தூய்மைப்பணி செய்யும் வேலு-வள்ளி தம்பதி, உடன் பணியாற்றும் டென்னி என்பவரின் குழந்தையை கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.



