மகளின் தலையில் அசிட் ஊற்றிய தந்தை: இருவரும் மருத்துவமனையில்..!

#Police #Hospital #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
மகளின் தலையில் அசிட் ஊற்றிய தந்தை: இருவரும் மருத்துவமனையில்..!

வேலை செய்யும் இறப்பர் தொழிற்சாலையில் இருந்து அசிட் போத்தலைத் திருடிச் சென்று மகளின் தலையில் அசிட் ஊற்றச் சென்ற தந்தையும் அசிட் வீசி பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவரது மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மகளையும் குடும்பத்தினரையும் துன்புறுத்துவதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீக்காயங்களுக்கு உள்ளான 25 வயதுடைய மகள் இரண்டு பிள்ளைகளின் தாயார் என்பதுடன் சந்தேகநபர் புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 52 வயதுடையவர்.

இறப்பர் தொழிற்சாலையில் இருந்து அசிட் பாட்டில் திருடப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!