சேலத்தில் காவிரி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் ஒருவர் பலி, 3 பேர் மாயம்!
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

சேலம் அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி மாயமானார்கள். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கல்வதங்கம் வட்டம் காவிரி ஆற்றுக்கு எடப்பாடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர், மேட்டூர் அரசு கல்லூரி மாணவர்கள் 2 பேர் என மொத்தம் 10 பேர் குளிப்பதற்காக சென்றனர். அதன்பின், நான்கு கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனார்கள்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் நீரில் மூழ்கிய மாணவர்களை தேடி வருகின்றனர். இந்தநிலையில், ஒரு மாணவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. மற்ற 3 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



