தபால் மூல வாக்குச் சீட்டுகள் அச்சடிக்க திறைசேரியிலிருந்து இதுவரை பணம் கிடைக்கவில்லை

#SriLanka #Election #Election Commission #money #Bank #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
தபால் மூல வாக்குச் சீட்டுகள் அச்சடிக்க  திறைசேரியிலிருந்து இதுவரை பணம் கிடைக்கவில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களை அச்சிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்காக திறைசேரியிலிருந்து 5 கோடி ரூபாவுக்கும் அதிக பணம் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அச்சிடும் நடவடிக்கையில்ஈடுபட்டு வந்த 200 இற்கும் மேற்பட்ட அரசாங்க அச்சக ஊழியர்கள் உதவித்தொகை இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்க அச்சகர் திருமதி கங்கானி லியனகே கருத்து தெரிவிக்கையில், ​​திறைசேரிக்கு நினைவூட்டல் ஒன்றை வழங்க உள்ளதாக குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!