இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Maldives
#Meeting
Prathees
2 years ago

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் அலி ஃபைஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனை இன்று சந்தித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் மாலைதீவு உயர்ஸ்தானிகரும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக உறுதியளித்த உயர்ஸ்தானிகர், மாலைதீவின் நிரந்தர நண்பராக இருப்பதற்கு இலங்கைக்கு தனது நன்றியைத் தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



