மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை

இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பணம் காணாமல் போனமை தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் “பாதுகாப்பான வைப்புப்பெட்டியில்” வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில், அன்றைய தினம் அந்த திணைக்களத்தில் பணியாற்றிய சுமார் 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி கட்டிடத்தின் அதியுயர் பாதுகாப்பு பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த போதே இந்த பணம் காணாமல் போயுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



