தொடர்ந்து வரும் பண்டிகை நாட்கள்! சிறப்பு பேருந்துகளை இயக்கும் தமிழ்நாடு அரசு
#TamilCinema
#Tamil Nadu
#Tamil People
Mani
2 years ago
தமிழ் புத்தாண்டு இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையும், அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வருகிறது. இதனால், சென்னை மற்றும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 300 பேருந்துகளை வியாழக்கிழமை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை இயக்குகிறது. இதைத்தொடர்ந்து விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ரம்ஜான் பண்டிகைக்கு மக்களை அழைத்துச் செல்ல இந்த பேருந்துகள் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.