மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவரின் கணவர் மர்மமான முறையில் மரணம்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரின் கணவர் இன்று (11) பிற்பகல் வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொல்கசோவிட சியம்பலாகொட, ஜயலியாகமவில் வசித்து வந்த பொறியாளரான பி. புஷ்பகுமார நிஷங்க என்ற 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொறியாளர் வீட்டில் இருந்து சத்தம் எதுவும் கேட்காததால், பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வேறு நபருடன் சேர்ந்து வீட்டை வெளியில் இருந்து சோதனை செய்தார்.
அங்குஇ வீட்டில் இருந்து பதில் வராததால், வீட்டின் ஜன்னல் திறந்து,சம்பந்தப்பட்ட நபர் வீட்டுக்குள் நுழைந்தார்.
அங்கு, வீட்டின் வரவேற்பறையில் உள்ள நாற்காலிக்கு அருகில் பொறியாளர் ரத்த வெள்ளத்தில் முகம் குப்புறக் கிடப்பதைப் பார்த்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கஹதுடுவ பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் வந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவருவதாவது,
பொறியியலாளர் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாகவும், அவரது மனைவி மட்டக்களப்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், மலையக குற்றப் பிரிவின் பிரதான பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



