எதிர்க்கட்சிகள் தங்களுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்கிறது; ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு எதிராக போராட பாஜக உறுதி எடுத்துள்ளது: பிரதமர் மோடி
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#PrimeMinister
Mani
2 years ago
எதிர்க்கட்சிகள் தங்களுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்வதாக தெரிவித்த பிரதமர் மோடி ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு எதிராக போராட பாஜக உறுதி எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் 44-வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பாஜக அலுவலகத்தில் கட்சி தொண்டர்களிடம் உரையாற்றிய பிரதமர், எதிர்க்கட்சிகள் தங்கள் குடும்பத்தை பற்றி மட்டுமே நினைப்பதாகவும், எதிர்க்கட்சிகளின் ஏகாதிபத்திய மனப்பான்மை நாட்டு மக்களை எப்போதும் அடிமைகளாகவே நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கட்சி கொடி ஏற்றினார்.