ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான நேற்று நடந்த சிறப்பு திருமஞ்சன விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
#God
#Temple
#Thirumal
#Festival
Mani
2 years ago

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவத்தின் கடைசி நாளான நேற்று சிறப்பு திருமஞ்சனத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வருடாந்திர வசந்த விழா ஏப்ரல் 3 ஆம் தேதி தொடங்கியது.
இறுதி நாளில் சீதை, ராமர், லஷ்மணன், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ருக்மணி ஆகியோர் வசந்த மண்டபத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு அவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு திருமஞ்சனம் வழங்கப்பட்டது. வசந்த உற்சவம் நிறைவடைந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.



