முகலாயர்களின் வரலாற்றை நீக்கி, பள்ளி பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
#India
#School Student
#education
Mani
2 years ago
என்சிஇஆர்டி பன்னிரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து இஸ்லாமிய எழுச்சி மற்றும் கலாச்சார மோதல் தொடர்பான பிரிவுகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.திருத்தப்பட்ட என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை தொடரும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கும் பொருந்தும்.
காங்கிரஸ் சார்பு எழுந்தாளர்கள் வரலாற்றை திரித்து கூறியப்பதாகவும், அதனை மாற்றும் நேரம் வந்துவிட்டதாகவும் பாஜக தலைவர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.