காலி பாட்டிலுக்கு ரூ.10; கோவை மாவட்டத்தில் புதிய திட்டத்தை கொண்டு வந்த டாஸ்மாக்
                                                        #Tamilnews
                                                        #ImportantNews
                                                        #drink
                                                        #Alcohol
                                                    
                                            
                                    Mani
                                    
                            
                                        2 years ago
                                    
                                இன்று முதல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் நீலகிரி மாவட்டத்தில் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, கோவை மாவட்டத்திலும் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இனி காலி மது பாட்டிலை திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக இன்று முதல் இந்த திட்டம் கோவையிலும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.