அம்ரித்பால் சிங்கின்நெருங்கிய கூட்டாளி ஜோகா சிங் கைது

#India #TamilCinema #Tamilnews #Tamil Nadu
Mani
2 years ago
அம்ரித்பால் சிங்கின்நெருங்கிய கூட்டாளி ஜோகா சிங் கைது

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் போலீஸருக்கு கடும் நெருக்கடி கொடுத்திருக்கும் நிலையில், அவரது கூட்டாளி இன்று பஞ்சாபில் கைது செய்யப்பட்டார். வாரிஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பின் வாயிலாக மத தீவிரவாத பிரசாரத்தில் அம்ரித்பால் சிங் ஈடுபட்டு வந்தார். பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கும் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார்.

ஆதரவாளரை மீட்க, காவல் நிலையத்துக்குள் நுழைந்து, அம்ரித்பால் சிங் வன்முறையில் ஈடுபட்டார். கைது செய்ய போலீசார் முயற்சித்த போது அவர் கடந்த 18ல் தப்பி ஓடினார்.போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளியும், அவரது கார் டிரைவருமான ஜோகா சிங் என்பவரை, லுாதியானா அருகே சோனேவால் என்ற இடத்தில் போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். அம்ரித்பால் சிங்கை பிடிக்கும் முயற்சியில், பஞ்சாப் போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!