கிணறு இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
#India
#Lanka4
#Tamil
#Tamilnews
#Death
#Police
Prathees
2 years ago
இந்திய மத்தியப் பிரதேச கோயில் ஒன்றின் கிணறு இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்தூர் நகரில் நடந்த விபத்தில் மேலும் 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரைக் காணவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் 40 அடி ஆழமுள்ள குறித்த கிணற்றின் மீது கொன்கிரீட் பலகையில் நின்று கொண்டிருந்தபோது, அது சரிந்து வீழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்து பண்டிகையான ராம நவமியை முன்னிட்டு பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை நிகழ்வின் போது இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்தது.