கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முக கவசம் கட்டாயப்படுத்தி உள்ளது தமிழக அரசு
#Covid Vaccine
#Covid 19
#Covid Variant
#Tamil Nadu
#Tamilnews
#sri lanka tamil news
Mani
2 years ago
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல உயர்ந்த ஒரு நிலையில் உள்ளது இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளில் எண்ணிக்கை கூடிக் கொண்டு செல்கிறது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு கொரோனா குறித்து ஆலோசனை ஒன்று முன் வைத்துள்ளது அதில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் பார்வையாளர்கள் மருத்துவர்கள் என அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்துள்ளது இதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் உறுதிப்படுத்தி உள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.