தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
#Face_Mask
#Corona Virus
#Fever
#Hospital
#Tamil Nadu
#Tamil People
#Tamilnews
#ImportantNews
#Breakingnews
Mani
2 years ago

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் நாளை முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து தற்போது தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.



