பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை

#Robbery #Chennai #Tamil Nadu #Tamilnews
Mani
2 years ago
பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை ஆழ்வார்பேட்டையில் சினிமா பின்னணி பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து வீட்டில் வேலை செய்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அபிராமபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகை காணாமல் போனதாக விஜய் யேசுதாசின் மனைவி தர்சனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிப்ரவரி 2 ஆம் தேதி வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த நகையை 18ஆம் தேதி எடுக்க சென்ற போது காணாமல் போய் இருந்ததாகவும், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தற்போது புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டில் வேலை செய்யும் மேனகா, பெருமாள், சையத் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளதையடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!