அதிகளவில் ஸ்டீராய்டு ஊசி பயன்பாட்டால் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த ஜிம் பயிற்சியாளர்
#India
#Gym
#Injection
#BLOOD
#Vomit
#Death
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

சென்னை அடுத்த ஆவடியை சேர்ந்த இளைஞர் ஆகாஷ். 25 வயதாகும் இவர் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் திடீரென ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட அவர், அதிக அளவில் ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் எதிரொலியால், ஆகாஷின் இரண்டு கிட்னியும் செயல் இழந்த நிலையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.



