முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத்திட்டம்! அரசாணை வெளியீடு
#Tamil Nadu
#M. K. Stalin
#Tamil People
#Tamilnews
#TamilNadu President
#sri lanka tamil news
Mani
2 years ago
.jpg)
பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தை போலவே, முதலமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம் எனும் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், முதலமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் படி, நான்காயிரம் கோடி மதிப்பீட்டில் கிராம சாலைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாயிரத்து 300 கோடி மதிப்பீட்டில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைத்தல், பழைய சாலைகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



