ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி, மெட்ரோ ரயில் சேவை, நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு
#MetroTrain
#Cinema
#Tamil Nadu
#Tamil Student
Mani
2 years ago

சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் வருகின்ற 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வெளிப்புற பங்குதாரர் மார்க் மெட்ரோ நிறுவனத்தின் சார்பில் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி (அன்பின் சிறகுகள்- Wings of Love) 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி முதல் 11:30 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சி டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதால் நிகழ்ச்சியை கண்டுகளிக்க வரும் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 11:00 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் அன்று மட்டும் நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.



