கோவிட் வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்ட திருச்சியை சேர்ந்த 27 வயதான இளைஞர் நேற்று உயிரிழப்பு

#Covid 19 #Death #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
கோவிட் வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்ட திருச்சியை சேர்ந்த 27 வயதான இளைஞர் நேற்று உயிரிழப்பு

கோவிட் மற்றும் நாடு முழுக்க 955 பேரும் அதிகபட்சமாக தமிழகத்தில் 545 பேரும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சியைச் சேர்ந்த ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

நாடு முழுதும் கடந்த ஜனவரி மாதம் முதலே, இன்ப்ளூயன்ஸா எச்3என்2 என்ற வகை தொற்றால் காய்ச்சல் பரவத் துவங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சியில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

அவருடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில், அவர் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பால் இறந்தது தெரியவந்தது.

நாடு முழுவதும் 955 பேர் பாதிக்கபட்ட நிலையில், தமிழகத்தில் 545 பேருக்கும், மகாராஷ்டிரா வில் 170 பேருக்கும், குஜராத்தில் 74 பேருக்கும், கேரளா வில் 42 பேருக்கும், பஞ்சாப்பில் 28 பேருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!