நாடாளுமன்றம் காதல் மன்றமானது: நாடாளுமன்றத்தில் காதலை கூறிய எம்.பி.

ஆஸ்திரேலியாவில் எம்.பி. ஒருவர் நாடாளுமன்ற உரையின் போதே,தமது காதலியான சக எம்.பி.யை, திருமணம் செய்து கொள்ள விருப்ப அழைப்பு விடுத்துள்ள ருசிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி.யான நாதன் லாம்பர்ட் (Nathan Lambert), நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது யாருமே எதிர்பாராத வகையில், தனது காதலியான எம்.பி. நோவா எர்லிச்சை பார்த்து, நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தில் பொருட்களை கொண்டு வர அனுமதி இல்லை என்பதால் தற்போது தான் மோதிரம் கொண்டு வரவில்லை என்றும், அது பாதுகாப்பாக என்னிடம் இருக்கிறது, எனவே இரவில் மோதிரத்தை தருவதாகவும் எம்.பி. நாதன் லாம்பர்ட் தமது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதைக்கேட்டு, நாடாளுமன்ற அவையில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி எம்.பி.யின் காதலுக்கு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எம்.பி. லாம்பர்டினுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது காதலை ஏற்றுக் கொண்ட நோவா எர்லிச் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.



