இத்தாலியில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் ...

மார்ச் 27, 2023 முதல் ஐரோப்பிய அல்லாத நாடுகளுக்கு வழங்கப்படும் வேலைகளுக்கான விண்ணப்பங்களை இத்தாலிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உத்தியோகபூர்வமாக SLBFE க்கு அறிவித்துள்ளதாகவும், பருவகாலத் தொழிலாளர்கள், பருவகாலமற்ற பணியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வேலைகள் வழங்கப்படும் என்றும் SLBFE அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
டிரக் டிரைவர்கள், எலக்ட்ரீஷியன்கள், மெஷின் ஆபரேட்டர்கள் மற்றும் கட்டுமானம், ஹோட்டல், உணவு, கடற்படை, சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் உள்ளவர்களையும் உள்ளடக்கிய வேலைகளுக்கு பொருத்தமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று SLBFE மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அல்லாத நாடுகளுக்கு 82,702 வேலை வாய்ப்புகளை இத்தாலி வழங்குகிறது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.anpal.gov.it/assumere-lavoratori-non-comunitari-anno-2023 வழியாக வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



