டொலரின் பெறுமதி வீழ்ச்சியினால் மகிழ்ச்சியடையும் விமான பயணிகள்!
#SriLanka
#Airport
#AirCraft
#prices
#Dollar
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியினால், நாட்டிலிருந்து பயணிக்கும் பயணிகள் விமான டிக்கெட்டுகளின் பணத்தினை செலுத்துவதில் சற்று நிம்மதி அடைந்துள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அமெரிக்க டாலரில் பணம் செலுத்தப்படுவதாகவும், ரூபாய் மதிப்பு வலுப்பெற்றுள்ளதால், பயணிகளுக்கு அந்த நன்மை ஏற்படும் என, விமான நிறுவனங்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் 371 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்றைய நிலவரப்படி 325 ரூபாவாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 13 வீதத்தால் மிகைப்படுத்தப்பட்டுள்ளது.



