யாழில் கூலிப்படைகளை இயக்கும் வெளிநாட்டு தலைவர்களை வலைபோட்டு தேடும் குழு

யாழில் கூலிப்படைகளை இயக்கும் வெளிநாட்டு தலைவர்களை வலைபோட்டு கட்டு நாயக்கா விமான நிலையத்தில் பலப்படுத்தப்படும் சோதனைகள்!
இலங்கை பிரஜாவுரிமை அல்லது இரு நாட்டு பிரஹாவுரிமை பெற்று வெளிநாடுகளில் இருந்து அந்தந்த நாடுகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரையும். வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் அடிதடி குறூப்புக்களை நடத்துகிறவர்களை இலங்கை குற்றப்புலனாய்வுத்துறை கைதுசெய்ய புதிய படையொன்றை ஆரம்பித்துள்ளதென நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து இயக்கும் இயங்கும் சட்ட விரோத கும்பலில் சிலர் இலங்கையில் வந்து இளைஞர்களுக்கு பணம் மற்றும் போதைவஸ்து கொடுத்து சமூக சீர்கேட்டை செய்வதாகவும். அவர்கள் தாம் பிரதான கட்சிகளின் தலைவர்களோடு நேரடி தொடர்பை கொண்டுள்ளதாகவும் போலியான முகங்களை வைத்து நடமாடுவதாகவும் இலங்கை குற்றப்புலனாய்வு துறை தெரிவிக்கிறது.
இது தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து கிடைத்த துப்பின் அடிப்படையில் பிராஸ், சுவிஸ் நாட்டிலிருந்து வந்த சிலர் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு முக்கிய ஊடகம் தெரிவிக்கிறது.
மற்றும் இப்படியான சட்ட விரோத கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் தான் நாட்டில் நல்ல சமூகத்தை உருவாக்கலாம் எனவும் கூறப்படுகிறது.



