கனடாவில் 21 வாரத்துக்குள் பிறந்த இரட்டை தமிழ் குழந்தை கின்னஸ் சாதனை!

#world_news #World_Health_Organization #WorldRecord #Tamilnews
Nila
2 years ago
கனடாவில் 21 வாரத்துக்குள் பிறந்த இரட்டை தமிழ் குழந்தை கின்னஸ் சாதனை!

கனடாவில் வசித்து வரும் தமிழ் தம்பதியான  ஷகினா ராஜேந்திரம் , ஷகினா கர்ப்பமாகி 21 வது மாதத்தில் இரட்டைக் குழந்தை பெற்றெடுத்துள்ளார். பொதுவாக குழந்தைகள் தாய் வயிற்றில் 40 வாரங்கள் கிட்டதட்ட 260 முதல் 280 நாட்கள் இருக்கும், ஷகினா ராஜேந்திரம் தம்பதியினருக்கு 21 வாரத்தில் இரட்டை  குழந்தைகளான  ஆதியா அட்ரிய பிறந்தார்கள். ஷகினா ராஜேந்திரம்  21 வாரங்கள் மற்றும் ஐந்து நாட்களில் பிரசவ வலி ஏற்பட்டதாகவும், குழந்தைகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள்  பூஜ்ஜியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதிக இரத்தப்போக்கு இருந்தபோதிலும், சில மணிநேரங்களுக்கு குழந்தைகளை உள்ளே வைத்திருக்க தன்னால் முடிந்தவரை முயற்சித்ததாக அவர் கூறினார். பெரும்பாலான வைத்தியசாலைகளில் 24 முதல் 26 வாரங்களுக்கு முன் பிறந்த குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சிப்பதில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக, இந்த ஜோடி Toronto உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனைக்கு சென்று ஒரு குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில்  குழந்தைகள் பிறந்தன. ஆதியாவுக்கும், அட்ரியலுக்கும் தற்போது ஒரு வயதாகின்றது. உலகிலேயே மிகக் குறைந்த கர்ப்ப காலத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளாக  கின்னஸ் உலக சாதனையில் இணைந்துள்ளனர். இதேவேளை, 21 வாரங்கள் மற்றும் ஒரு நாளில் பிறந்த அலபாமாவைச் சேர்ந்த கர்டிஸ் மீன்ஸ் என்ற குழந்தைதான் இதுவரை பிறந்த மிகக் குறைமாத குழந்தை ஆகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!