பிரதமர் மோடியுடன் கிரிக்கெட் போட்டியை ரசித்த ஆஸ்திரேலிய பிரதமர்

#India #India Cricket #Australia #PrimeMinister
Mani
2 years ago
பிரதமர் மோடியுடன் கிரிக்கெட் போட்டியை ரசித்த ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருடன் அமைச்சர்கள் உட்பட 27 பேர் கொண்ட குழுவும் வந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை.

முதலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் பூபேந்திர படேல் வரவேற்றார்.வரவேற்பு முடிந்ததும், சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்துக்கு அந்தோணி சென்றார். அவருடன் முதல்வர் பூபேந்திர படேலும் சென்றார்.

ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு புகைப்படங்களைப் பார்த்தார். பின்னர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.பின்னர், ஆஸ்திரேலிய பிரதமர் கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஹோலி பண்டிகையில் பங்கேற்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று காலை தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டத்தை பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் பார்வையிடுகிறார். சில மணி நேரம் பார்த்துவிட்டு கிளம்பி விடுகின்றனர்.

இவர்களின் வருகையை முன்னிட்டு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அகமதாபாத்திற்கு வந்த பிறகு தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அகமதாபாத்தில் வியத்தகு வரவேற்பு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா-இந்திய உறவுகளுக்கான முக்கியமான பயணத்தின் தொடக்கம் இது," என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!