இலங்கைக்கு உதவ இந்தியா துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளது - இலங்கை வெளியுறவு அமைச்சர்

பொருளாதார நெருக்கடியின் போது மற்ற எந்த நாட்டையும் விட இந்தியா இலங்கைக்கு உதவியது. அத்துடன் இலங்கைக்கு உதவ இந்தியா துணிச்சலான முடிவுகளை எடுத்ததாகவும், சுமார் 3.9 பில்லியன் மதிப்புள்ள இருதரப்பு கடன் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இந்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்திய அரசாங்கம் துணிச்சலான முடிவுகளை எடுக்க முன்வந்தது மட்டுமல்லாமல், இந்திய மக்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்தனர் என்று குறிப்பிட்டார்.
"கெட்ட காலம் வரும்போதே உங்கள் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அறிய முடியும்.இந்தியா எங்களுடன் நிற்கிறது, எனவே இந்தியா எங்களுக்காக செய்ததற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்," என்று சப்ரி கூறியுள்ளார்.
இலங்கையை காப்பாற்ற இந்தியாவின் தலையீடு மற்ற நாடுகளை விட அதிகமாக இருப்பதாகவும், சப்ரி கூறியுள்ளார்



