இன்று முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானம்

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள வரிக் கொள்கை உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று (09) முதல் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக டாக்டர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவிக்கும் என அதன் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் நெருக்கடி நிலை மேலும் வளர்ச்சியடையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் கலாநிதி பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார்.



