இலங்கை நெருக்கடியிலிருந்து மீள உதவிய மூன்று பெண்கள் பற்றி ஜனாதிபதி சொன்ன கதை

உலகில் வளர்ந்த நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க பாடுபடுவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசிய பிராந்தியத்தில் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் இலங்கை முன்னிலை வகிக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இன்னல்களுக்கு முகம் கொடுத்தபோது அதற்கு உறுதுணையாக இருந்த பெண்கள் உலகில் மூன்று பேர் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அவர்கள் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளித்ததாகவும், கடினமான நேரத்தில் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கும் அவர்கள் உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம், அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லானா மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஆகிய மூன்று பெண்களும் அடங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைப் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், இந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகின் வளர்ந்த நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் செயற்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.



