ஜனாதிபதி பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

#Ranil wickremesinghe #Sri Lanka President #Court Order #Colombo #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
ஜனாதிபதி பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் உள்நாட்டு எரிவாயு கொள்வனவுக்கான டெண்டரை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

சட்டத்தரணி நாகஹானந்த கொடித்துவக்கு சமர்ப்பித்த மனு தொடர்பில் ருவான் பெர்னாண்டோ மற்றும் மாயாதுன்னே கோரையா ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த மனுவில் ஜனாதிபதி பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு அரசியலமைப்பின் 35ஆவது சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு எதிராக இந்த வழக்கை தொடர முடியாது என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்  சுமதி தர்மவர்தன, முன்னதாக நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்டது மற்றும் அரசியலமைப்பின் 35 வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை நீடிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

அதன் பின்னர், மனுவைத் தொடர்வது குறித்து முடிவெடுக்க மார்ச் 15ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!