பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு

#India #PrimeMinister #Court Order
Mani
2 years ago
பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு

டெல்லியில், முகமது முக்தார் அலி, 2019 ஜனவரி 1-ஆம் தேதி காவல்துறையின் உதவி எண் 100-க்கு அழைத்து, பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாகப் பேசியதாகவும், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

இது தொடர்பாக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 506(2) பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

முகமது முக்தார் அலி யாரையும் கொன்று விடுவதாக மிரட்டியதற்கான ஆதாரம் எதையும் போலீசார் முன்வைக்கவில்லை என்றும், அதனால் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் விசாரணை முடிவில் மாஜிஸ்திரேட் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!