விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

#India #Court Order #Breakingnews
Mani
2 years ago
விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை. கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.இவரை நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கை மும்பையில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு தடை கோரி விஜய் மல்லையா மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகினார். அங்கு அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் 2018ல் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதற்கிடையில், நீதிமன்றம் இடைக்காலத் தடை எதுவும் பிறப்பிக்கவில்லை, ஆனால் ஜனவரி 5, 2019 அன்று மும்பை சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது. அத்தகைய அறிவிப்பின் பேரில், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் வழக்குத் தொடரும் நிறுவனத்திற்கு வருகிறது.

இந்த நிலையில் விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை அமர்வு முன்பு நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக விஜய் மல்லையாவிடம் இருந்து தனக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்றார். இதையடுத்து அவரது மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!