வானகரம் அருகே லாரி மீது சொகுசு கார் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
#India
#Tamil Nadu
#Tamilnews
#Accident
Mani
2 years ago

சென்னை வானகரம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்ற சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேரில் இருவர் காயமடைந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் சிக்கிய காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



