ஜனாதிபதியை கொல்ல சதித்திட்டம் தீட்டியது குறித்து சிஐடி விசாரணை
#Ranil wickremesinghe
#Sri Lanka President
#SriLanka
#sri lanka tamil news
#Investigation
#Lanka4
Prathees
2 years ago

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள அரசியல் கட்சியொன்றுக்கு தொடர்புடையவர்கள் குழுவொன்று வெளிநாடு ஒன்றில் படுகொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சி செயற்பாட்டாளர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.



