கே.எல் ராகுல் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை - கங்குலி கருத்து

#India Cricket #Australia #sports
Mani
2 years ago
கே.எல் ராகுல் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை - கங்குலி கருத்து

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் இரண்டு போட்டிகளில் கேஎல் ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தனது கடைசி 10 இன்னிங்ஸ்களில் அரை சதம் அடிக்காததால், டெஸ்ட் துணை கேப்டன் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் விளையாடும் போது ஓட முடியவில்லை என்றால் வேறு என்ன செய்ய முடியும் என கங்குலி தனது வெளிப்படையான கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:உங்களால் இந்தியாவிலேயே ரன்களை குவிக்க முடியவில்லை என்றால் நிச்சயம் உங்கள் மீது விமர்சனம் எழத்தான் செய்யும். கே.எல் ராகுல் மட்டும் இந்த நிலையை சந்திக்கவில்லை. இதேபோன்று பலவீரர்கள் இந்த நிலையை சந்தித்திருக்கிறார்கள்.

துணை கேப்டன் பதவி நீக்கம் எதிர்பார்க்கப்பட்டது. தேர்வுக்குழு அவரை தொடர்ந்து கண்காணித்து இந்த முடிவை எடுக்கலாம். இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அவரது திறமையைக் கண்டு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார். இவ்வாறு கங்குலி கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!