தனது காதலியுடன் முன்னாள் காதலனான தனது நண்பன் தொடர்பில் இருந்ததால், நண்பனை கொலை செய்த இளைஞன்
#Murder
#Young
#Youngster
Mani
2 years ago
நவீன் மற்றும் ஹரிஹர கிருஷ்ணா ஆகியோர் கல்லூரியில் ஒன்றாக படித்ததாகவும், அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை இருவரும் காதலித்ததாகவும் கூறப்படுகிறது.
நவீன் முதலில் காதலை தெரிவித்து மாணவியுடன் பழகி வந்தநிலையில், ஓரிரு ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த மாணவியுடன் ஹரிஹர கிருஷ்ணா பழகி வந்துள்ளார்.
அப்போது முன்னாள் காதலனும் தனது நண்பனுமான நவீன் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பது ஹரிஹர கிருஷ்ணாவிற்கு தெரியவந்தது.
இதனையடுத்து இருவரும் ஒன்றாக மது அருந்தும்போது நவீனின் தலையை துண்டித்து ஹரிஹர கிருஷ்ணா கொலை செய்துள்ளார்.
நவீனின் இதயம், அந்தரங்க உறுப்பை அகற்றியதுடன் விரல்களையும் துண்டாக்கி அதனை புகைப்படம் எடுத்து தனது காதலிக்கு அனுப்பிவைத்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.