உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியின் பெயரை பரிந்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி பைடன்
#America
#President
#Biden
#Central Bank
#India
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

அமெரிக்காவில் வாஷிங்டனில் உலக வங்கி அமைந்துள்ளது. இதன் தலைவராக டேவிட் மல்பாஸ் இருந்து வருகிறார். இவர் தன்னுடைய பதவி காலம் முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனால் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரி அஜய் பங்காவின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.
அஜய் பங்கா மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியும் தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கத.



