துஷ்பிரயோகம் செய்ய வந்த நபரின் நாக்கை கடித்து பொலிசில் ஒப்படைத்த பெண்

#Britain #Arrest #Abuse #Sexual Abuse #Police #world_news #Lanka4
Prathees
2 years ago
துஷ்பிரயோகம் செய்ய வந்த நபரின் நாக்கை கடித்து பொலிசில் ஒப்படைத்த பெண்

தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரின் நாக்கின் ஒரு பகுதியை பெண் ஒருவர் கடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

57 வயதான இந்த பிரித்தானியப் பெண், கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி காலை தனது செல்ல நாயுடன் வீதியில் நடந்து சென்ற போது இந்த எதிர்பாராத சம்பவத்தை எதிர்கொண்டார்.

அந்த பெண், தான் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாகவும், அவர் சுயநினைவின்றி நடந்துகொண்டே தனது ஆடைகளை கழற்ற முயன்றதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

முத்தமிட்டுக் கொண்டிருந்தவரின் நாக்கை பற்களால் பலமாக அழுத்தியதில் அதன் ஒரு பகுதி உடைந்ததாகவும், பின்னர் அவர் தன்னை விட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வந்து தனது மகனுக்கு தகவல் தெரிவித்ததாகவும், பின்னர் தன்னை துஷ்பிரயோகம் செய்ய வந்த நபரின் நாக்கின் பகுதியை பொலிஸாரிடம் ஒப்படைத்து சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பிரித்தானிய பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர். துனிசிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!